/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டு சீட்டு முறையில் பள்ளி மாணவ நிர்வாகிகள் தேர்வு
/
ஓட்டு சீட்டு முறையில் பள்ளி மாணவ நிர்வாகிகள் தேர்வு
ஓட்டு சீட்டு முறையில் பள்ளி மாணவ நிர்வாகிகள் தேர்வு
ஓட்டு சீட்டு முறையில் பள்ளி மாணவ நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 11, 2025 11:08 PM
கூடலுார்; கூடலுார், தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரி மேல்நிலைப் பள்ளியில், ஓட்டு சீட்டு முறையில் மாணவர்கள் ஓட்டளித்து நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
கூடலுார், தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவ, மாணவியர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தேர்தல் பணிகளை பள்ளி தலைமை ஆசிரியை நிஷா பாப்பச்சன் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் நவ்சீன், மோகன், கிரேசி ,கிரபந்த், லால்ஷி உள்ளிட்ட,10 ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக பணியாற்றினர். மாணவர்கள் ஓட்டு சீட்டு முறையில் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாணவர் தலைவராக முகமது நபித், மாணவி தலைவியாக தர்ஷினி, ஸ்போர்ட்ஸ் கேப்டனாக ஹஷிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் ஓட்டுரிமை செலுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி மாணவர், மாணவி தலைவர் தேர்வு செய்ய்பட்டனர்,'என்றனர்.