/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி கிரசன்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அசத்தல்
/
ஊட்டி கிரசன்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அசத்தல்
ஊட்டி கிரசன்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அசத்தல்
ஊட்டி கிரசன்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அசத்தல்
ADDED : டிச 06, 2025 05:26 AM

ஊட்டி: ஊட்டி கிரசன்ட் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் அசத்தலாக இருந்தன.
ஊட்டி கிரசன்ட் பள்ளியில், ஆரம்ப பள்ளிமுதல், பிளஸ்-2 மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடந்தது.
சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி தாளாளர் உமர் பரூக் முன்னிலை வகித்தார். அதில், 'நீலகிரியில் உள்ள மின் நிலைய செயல்பாடுகள்; ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள்; ரோபோக்களின் இயக்கம்; அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கான எளிமையான வழிகள்; வனத்தின் பாதகாப்பு; செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்,' போன்றவை குறித்த படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து, ஊட்டியில் முதன்முறையாக இப்பள்ளியில் துவக்கப்பட்ட, 'ஏ.ஐ., லேப்' வகுப்பறையை சிறப்பு விருந்தினர் திறந்து வைத்தார்.
இதனை பெற்றோர் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் ஆல்ட்ரிச் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

