/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டாம் கட்ட தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்றம் துவக்கம்
/
இரண்டாம் கட்ட தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்றம் துவக்கம்
இரண்டாம் கட்ட தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்றம் துவக்கம்
இரண்டாம் கட்ட தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்றம் துவக்கம்
ADDED : மே 18, 2025 10:00 PM

குன்னுார்; நீலகிரியில், தேசிய என்.சி.சி. மாணவியரின் இரண்டாம் கட்ட மலையேற்ற பயிற்சி முகாம் துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டுக்கான தேசிய என்.சி.சி., மாணவியரின் முதல் கட்ட மலையேற்ற பயிற்சி நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் முத்தொரை பாலாடா ஏகலைவா மாதிரி பள்ளியில் துவங்கியது.
பயிற்சியை தமிழகம், புதுவை என்.சி.சி., கமோடர் ராகவ் துவக்கி வைத்து பேசினார். பாதுகாப்பு அலுவலர் மேலா மஞ்சித்கவுர் முன்னிலை வகித்தார்.
கோவை மாவட்ட குழு கமாண்டர் கர்னல் ராமநாதன், கர்னல் ரவிச்சந்திரன், லெப்.கர்னல் தீபக், துணை கமாண்டன்ட் லெப்.கர்னல் கார்த்திக் மோகன், ஒருங்கிணைப்பாளர் கர்னல் சந்தோஷ் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழகம், புதுவை அந்தமான் நிக்கோபார், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, கோவா மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து என்.சி.சி., மாணவியர் பங்கேற்றனர். நேற்றைய முகாமில், 110 மாணவியர் பங்கேற்றனர்.