/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடைநிலை ஆசிரியர்கள் 17வது நாளாக போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் 17வது நாளாக போராட்டம்
ADDED : மார் 07, 2024 04:29 AM

ஊட்டி, : ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 17வது நாளாக, கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்,' என, தேர்தல் வாக்குறுதியில் தெறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க, மாநில அரசு முன்வரவேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது. நேற்று அனைத்து இடைநிலை பெண் ஆசிரியர்கள், செந்நிற புடவையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண் பிரபு,மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்தராணி உட்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

