/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜனாதிபதி வெலிங்டன் வருகை பாதுகாப்பு ஆலோசனை தீவிரம்
/
ஜனாதிபதி வெலிங்டன் வருகை பாதுகாப்பு ஆலோசனை தீவிரம்
ஜனாதிபதி வெலிங்டன் வருகை பாதுகாப்பு ஆலோசனை தீவிரம்
ஜனாதிபதி வெலிங்டன் வருகை பாதுகாப்பு ஆலோசனை தீவிரம்
ADDED : நவ 22, 2024 11:28 PM

குன்னுார்: குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஊட்டிக்கு 27ம் தேதியில் வருகிறார். 28ல் குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு வருகை தருகிறார்.
இதை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, நேற்று ராணுவ கல்லுாரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, கூடுதல் கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து விவாதங்கள் நடந்தன.
அதில், தீயணைப்பு துறை, வனத்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவித்து வந்தனர்.
ராணுவ மையம் பகுதியை பொலிவு படுத்தும் பணி நடந்து வருகிறது.