/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூத்தோர் தடகள போட்டி; நீலகிரி வீரர்கள் வெற்றி
/
மூத்தோர் தடகள போட்டி; நீலகிரி வீரர்கள் வெற்றி
ADDED : மார் 21, 2025 10:04 PM
கோத்தகிரி; பெங்களூரு சாய் மைதானத்தில், தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி மற்றும் செயலாளர் திவாகரன் ஆகியோர் தலைமையில், மாவட்ட தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழகத்தின் சார்பாக பங்கேற்றனர்.
அதில், கோத்தகிரி குருக்கத்தி கிராமத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மணி, 2. கி.மீ., ஓட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார். கோத்தகிரி அளக்கரை கிராமத்தை சேர்ந்த, கிரீன்வேலி பள்ளி ஆசிரியை ஹேமலதா, 5 கி.மீ., நடை போட்டியில், மூன்றாம் இடத்திலும், 400 மீ.,தொடர் ஓட்டத்தில், இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றார்.
இதே போல, குன்னுார் பகுதியை சேர்ந்த சங்கீதா, 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதல் இடத்தில் வெற்றி பெற்றார். போட்டிகளில் சாதித்த, வீரர்கள், வீராங்கனைகளுக்கு, மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நிர்வாகிகள் உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.