ADDED : செப் 07, 2026 09:16 PM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மூத்த காங்., தலைவருமான அச்சுதன், 76, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
சித்துார் தொகுதியிலிருந்து, 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து, 4 முறை காங்., சார்பில் போட்டியிட்டு கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசியல் களத்தைத் தாண்டி, விவசாயியாகவும், கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்த இவர், தத்தமங்கலம் சேவை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், சித்துார் - தத்தமங்கலம் நகராட்சியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம், 12 மணிக்கு நடக்கிறது. தற்போதைய சித்துார் எம்.எல்.ஏ., சுமேஷ் இவரது மகன் ஆவார்.
