/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்கா சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

ADDED : டிச 10, 2024 11:25 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுற்றுலா பயணிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் வழிந்தோடுகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணியர், பாதசாரிகள் கழிவு நீர் செல்லும் பகுதியில் நடந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில், பல நாட்களாக நடைபாதையில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. சுற்றுலா பயணியர் முகம் சுளித்து செல்வதுடன், உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,' ஊட்டி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
பூங்கா நுழைவு வாயில் அருகே கழிவுநீர் வழிந்தோடியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.