sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 வழிந்தோடுது கழிவுநீர்; நடைபாதையை சூழ்ந்த புதர் நாள்தோறும் மக்கள் அவதி

/

 வழிந்தோடுது கழிவுநீர்; நடைபாதையை சூழ்ந்த புதர் நாள்தோறும் மக்கள் அவதி

 வழிந்தோடுது கழிவுநீர்; நடைபாதையை சூழ்ந்த புதர் நாள்தோறும் மக்கள் அவதி

 வழிந்தோடுது கழிவுநீர்; நடைபாதையை சூழ்ந்த புதர் நாள்தோறும் மக்கள் அவதி


ADDED : பிப் 10, 2026 04:50 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி ஸ்டேட் பாங்க் நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடுவதும் , சாலை நடுவே புதர் சூழ்ந்ததால் பாதசாரிகள் அவதி அடைந்துள்ளனர்.

ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலான வார்டுகளில் நடைபாதை, சாலை பணி, கழிவுநீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொய்வு நிலையில் உள்ளது. வார்டு உறுப்பினர்கள் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினாலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே, ஊட்டி ஸ்டேட் பாங்க் நடை பாதையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள நடைபாதை நடுவே புதர்கள் சூழ்ந்துள்ளது. நடைபாதைகள் இடிந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் நடைபாதையில் வழிந்தோடுவதால் கடும் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் நடைபாதையில் நடக்க முடியாமல் நடைபாதை ஓரங்களில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான நடைபாதையில் ஏற்பட்டுள்ள அவலங்களை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us