/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகர் மன்ற கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: கமிஷனர் வெளியேறியதால் பரபரப்பு
/
நகர் மன்ற கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: கமிஷனர் வெளியேறியதால் பரபரப்பு
நகர் மன்ற கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: கமிஷனர் வெளியேறியதால் பரபரப்பு
நகர் மன்ற கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: கமிஷனர் வெளியேறியதால் பரபரப்பு
ADDED : அக் 29, 2025 11:37 PM

கூடலூர்: நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டத்தால், மன்ற கூட்டத்திலிருந்து கமிஷனர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர் நகர் மன்ற கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நேற்று, நடந்தது. கமிஷனர் சுவீதாஸ்ரீ முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தங்களின் வார்டு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
தொடர்ந்து, பேசிய கவுன்சிலர்கள், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கொண்டுவரப்பட்ட பணிகளுக்கு மாற்றாக வேறு பணிகளை மேற்கொள்ள கமிஷனர் வலியுறுத்துகிறார்.
வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், பல அடிப்படை வசதிகள் செய்து தர முன்வருவதில்லை. கவுன்சிலர்கள் தெரிவிக்கும் பணிகளை முழுமையாக செய்வதில்லை. பல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை ஏற்படுத்துகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அவரை மாற்ற வேண்டும்' என, கூறி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 11 கவுன்சிலர்கள் மன்றத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டரங்கிலிருந்து கமிஷனர் சுவீதாஸ்ரீ, வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளும் வெளியேறினார்கள்.
தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கவுன்சிலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதில், சில தி.மு.க., கவுன்சிலர்கள், காங்., மா.கம்யூ., அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சில கவுன்சிலர்கள், கமிஷனரை சமாதானப்படுத்தி கூட்டத்தில் பங்கேற்க முயற்சி மேற்கொண்டனர். கமிஷனர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை. இதனால், கவுன்சிலர்கள் மாலை வரை மன்றத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமிஷனர் சுவிதாஸ்ரீ கூறுகையில், ''மன்ற கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிகாரியுடன் பேசி முடிவு செய்யப்படும்.'' என்றார்.

