/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுங்கள்; இளைய தலைமுறையினருக்கு அறிவுரை

ADDED : ஆக 24, 2025 11:12 PM

குன்னுார்; குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரிஸ் மற்றும் சத்ய சாய் சேவா மாருதி அறக்கட்டளை சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் துவங்கியது.
போட்டிகள், மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில், 30 அணிகள் பங்குபெறுகின்றன.
சனி, ஞாயிறு, கிழமைகளில், மொத்தம், 81 போட்டிகள் நடக்கிறது. இறுதி போட்டி நவ., 2வது வாரம் நடக்கிறது.
துவக்க விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பு துணை தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சாய் அறக்கட்டளை சுவாமி மேகநாத சாய் போட்டியை துவக்கி வைத்து, நடுவர்களுக்கான சீருடைகளை வழங்கி பேசுகையில், ''இளைய தலைமுறையினர் மொபைல் உள்ளிட்டவைகளுக்கு அடிமையாக கூடாது. விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்து கொண்டு, தீய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்,'' என்றார்.