/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கார கொல்லி குடியிருப்பு பகுதியில் புதர் அகற்றி சீரமைப்பு பணி; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : டிச 03, 2024 05:52 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே காரக்கொல்லி பகுதியில், 36 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. சேரம்பாடி மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில், ஆபத்தான நிலையில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு மாற்றிடமாக வழங்கப்பட்டது.
ஆனால், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலையில், இரண்டு குடும்பங்களை தவிர, யாரும் இங்கு குடியேற வில்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் புதர்கள் சூழ்ந்து, தொகுப்பு வீடுகளே தெரியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. அதனையடுத்து சேரங்கோடு ஊராட்சி மூலம், முதல் கட்டமாக புதர்கள் வெட்டி அகற்றப்பட்டது.
தொடர்ந்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்து தர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.