/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதரால் சுகாதார சீர்கேடு; சீரமைப்பது அவசியம்
/
புதரால் சுகாதார சீர்கேடு; சீரமைப்பது அவசியம்
ADDED : செப் 30, 2025 10:08 PM
கோத்தகிரி; கோத்தகிரி நகராட்சி பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால், அரசு பஸ்கள் உட்பட, மினி பஸ்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. சாலை ஓரத்தில் விரிவாக்கப்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு விரிசல் ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி, வாகனங்கள் நிறுத்தாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. சமீபத்தில், குழி 'மூடப்பட்டுள்ளது. இருப்பினும், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகன மட்டும் நிறுத்தப்படுகிறது. இதன் கீழ் பகுதியில், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, புதர் மண்டி கிடக்கிறது. கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, புதரை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.