/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சில்ஹல்லா நீர் மின் திட்டம் : பசுமை நீலகிரி இயக்கம் எதிர்ப்பு
/
சில்ஹல்லா நீர் மின் திட்டம் : பசுமை நீலகிரி இயக்கம் எதிர்ப்பு
சில்ஹல்லா நீர் மின் திட்டம் : பசுமை நீலகிரி இயக்கம் எதிர்ப்பு
சில்ஹல்லா நீர் மின் திட்டம் : பசுமை நீலகிரி இயக்கம் எதிர்ப்பு
ADDED : ஏப் 02, 2025 09:29 PM
கோத்தகிரி:
மாநில அரசின் சூழல் விருது பெற்ற, பசுமை நீலகிரி இயக்க திட்ட இயக்குனர் ஆசிரியர் ராஜூ, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநில அரசு சில்ஹல்லா மின் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்பட்டதால், பல கிராமங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இத்திட்டத்திற்கு, பல ஆயிரம் மக்கள் தங்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்.
நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியில், புதிய அணைக்கட்டு தேவையில்லை.
இதனை கருத்தில் கொள்ளாமல், மாநில அரசு அணை கட்டுவதற்கான முன்னெடுப்பு எடுத்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த அணயை கட்டுவதற்கு பதிலாக, நீலகிரி மாவட்ட வனத்துறை வசம் உள்ள, 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கற்பூரம் மற்றும் சீகை காடுகளை, புல்வெளியாகவும், சோலை காடுகளாகவும் மாற்றினால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் நீர் இரு மடங்கு உயரும்.
மின் திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்பதால், இந்த திட்டத்திற்காக பெருந்தொகையை வீணடிப்பதற்கு பதிலாக, இங்கு உள்ள அணைகளை துார்வாரி, அவற்றின் கொள்ளளவை அதிகரிக்கலாம். தவிர காற்றாலைகள் மூலம், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளலாம்.
தென்னிந்தியாவின் நீர் தொட்டியான நீலகிரி மாவட்டம் பாதிக்கப்படாமல் இருக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

