ADDED : செப் 20, 2026 04:11 PM
தேயிலை அறுவடை பாதிப்பு
கோத்தகிரி: -: கோத்தகிரி தப்பகம்பை பகுதியில் யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி --–- மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் மற்றும் செம்மனாரை உள்ளிட்ட சமவெளி பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் உள்ளது.
சமீப காலமாக, தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தேயிலை தோட்டங்கள் வழியாக, கிராம பகுதியில் நடமாடுவது தொடருகிறது.
இதுவரை இல்லாத வகையில், நான்கு நாட்களாக, கோத்தகிரி அருகே, தப்பகம்பை குடியிருப்பை ஒட்டி, சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் ஒற்றை யானை நடமாடி வருகிறது.
இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட, பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்பு கருதி, யானையை வனப் பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
