/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் 'சஸ்பெண்ட்'
/
கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 30, 2025 08:28 PM
கூடலுார்; கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவரை ராக்கிங் செய்து தாக்கிய, ஆறு மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லுாரி நுழைவுவாயில், 24ம் தேதி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கும்பலாக நின்று, முதலாம் ஆண்டு படித்து வரும் பைக்காரா பகுதி சேர்ந்த பழங்குடி மாணவரை ராக்கிங் செய்து தாக்கியுள்ளனர்.
அவர் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறியதை தொடர்ந்து, எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதம் பெற்றனர்.
இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட கல்லுாரி நிர்வாகம், ஆறு சீனியர் மாணவர்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது. கல்லூரி முதல்வர் (பொ.,) சுபாஷினியிடம் கேட்டபோது,''புகார் தொடர்பாக, முழுமையான விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில், ஆறு மாணவர்கள் ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

