/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது
/
அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது
ADDED : பிப் 16, 2025 11:13 PM
கூடலுார்,; கூடலுார் தொரப்பள்ளியில் நடந்த சோதனை பணியின் போது, கர்நாடக அரசு பஸ்சில் தடை செய்யப்பட்ட புகையிலை கொண்டு வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் இருந்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு பஸ்களிலும் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், கேரளா அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கூடலுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, எஸ்.ஐ., கவியரசு மற்றும் போலீசார் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். அதில், கர்நாடகா அரசு பஸ்சில் சோதனை மேற்கொண்ட போது, ரெஜித், 26; முகமது அப்துல் நயிம்,46; கோப்பம்மா, 40; தேவிரா,40; லிங்க ராஜம்மா, 42; மகாதேவம்மா,49, ஆகியோரிடம் இருந்து தடை செய்யப்பட்ட, 80 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும். இதில், ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.