/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரத்தில் மோதி நின்ற பஸ்; ஆறு பேர் காயம்
/
மரத்தில் மோதி நின்ற பஸ்; ஆறு பேர் காயம்
ADDED : டிச 04, 2024 09:55 PM

குன்னுார்; குன்னுார் சின்ன கரும்பாலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி நின்றதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குன்னுார் அருகே, சோல்ராக் பகுதியில் இருந்து நேற்று மாலை அரசு பஸ், 9 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
சின்ன கரும்பாலம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தேயிலை வலது புறத்தில் தடுப்பை உடைத்து பள்ளத்தில் இறங்கியது. மரத்தில் மோதி நின்றதால் தேயிலை தோட்டத்தில் இறங்காமல் தடுக்கப்பட்டது.
அதில், பலத்த காயமடைந்த டிரைவர் நந்தகுமார்,51, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; லேசான காயமடைந்த நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி உட்பட, 5 பயணிகள் சிகிச்சை பெற்று சென்றனர்.