/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் திறன் மேம்பாடு விழிப்புணர்வு
/
பள்ளியில் திறன் மேம்பாடு விழிப்புணர்வு
ADDED : ஆக 17, 2025 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சூர்; மஞ்சூர் அரசு பள்ளி கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தீபா தலைமை தாங்கினார். பள்ளி மன்ற பொறுப்பு ஆசிரியர் அம்சவேணி ஆசிரியர்கள் சீனிவாசன், லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,''மாணவர்கள் கல்வியோடு இதர திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பல்கலை கழகங்கள் அங்கீகரித்த பட்டங்கள் படிக்க வேண்டும், கல்வி கற்கும் காலகட்டங்களில் இதர திறன்களான கூடுதல் மொழி அறிவு, தனித் திறன் மற்றும் கணினி உள்ளிட்ட இதர திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம்,'' என்றார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.