ADDED : ஆக 17, 2025 09:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; உள்நாட்டு பொருட்களை வாங்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஆர்ப் பாட்டம் நடந்தது.
சுதேசி இயக்கம் சார்பில், பந்தலுாரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி நிர்வாகி ராஜா தலைமை வகித்தார். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில பொறுப்பாளர் உன்னி கிருஷ்ணன், 'உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியம் மற்றும் வெளிநாடு, ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்குவதால் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்,' குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, 'அன்னிய பொருட்களை எதிர்ப்போம், இந்திய பொருட்களை வாங்குவோம்,' என்ற கோஷம் எழுப்பப் பட்டது.
சுதேசி விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வி.எச்.பி. நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.