/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாய்ந்த சி.சி.டி.வி., கம்பம்: கண்காணிப்பில் தொய்வு
/
சாய்ந்த சி.சி.டி.வி., கம்பம்: கண்காணிப்பில் தொய்வு
சாய்ந்த சி.சி.டி.வி., கம்பம்: கண்காணிப்பில் தொய்வு
சாய்ந்த சி.சி.டி.வி., கம்பம்: கண்காணிப்பில் தொய்வு
ADDED : ஜன 21, 2024 10:48 PM

ஊட்டி:ஊட்டி, ஆதாம் நீரூற்று அமைந்துள்ள பகுதியில், மின்கம்பம் சாய்ந்துள்ளதால், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஆதாம் நீரூற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமிக்க இந்த நீரூற்று, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இரவு நேரத்தில் நீரூற்றில் ஒளிரும் ஒளி, இங்கு வரும் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீரூற்று ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., மூலம், நகரப்பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், வாகனம் மோதியதில், கம்பம் சாய்ந்துள்ளது. இதுவரை, சீரமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, விபத்து உட்பட, அசம்பாவிதத்தை தவிர்க்க, சாய்ந்துள்ள சி.சி.டி.வி., கம்பத்தை சீரமைக்க போலீசார் நடவடிக்கை வேண்டும்.