/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சரியான விலை கொடுப்பதில்லை: சிறு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
/
சரியான விலை கொடுப்பதில்லை: சிறு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
சரியான விலை கொடுப்பதில்லை: சிறு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
சரியான விலை கொடுப்பதில்லை: சிறு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : அக் 21, 2025 07:59 PM
கோத்தகிரி: நீலகிரியில் இண்கோ சர்வ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், இண்கோ தொழிற்சாலைகளில், விவசாயிகளுக்கு சரியான விலை வழங்குவதில்லை என, விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தும்பூர் போஜன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் காரி, ஆண்டி கவுடர், சதீஷ் மற்றும் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
குன்னூர் இண்கோ சர்வ் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், 17 இண்கோ தொழிற்சாலைகள், சிறு குறு விவசாயிகள் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கு, பணம் பட்டுவாடா செய்வதில் மிகுந்த தாமதம் செய்து வருவதுடன், சரியான விலை தருவதில்லை.இண்கோ தொழிற்சாலைகளை நம்பியுள்ள, 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பணம் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் தனியார் தொழிலை தொழிற்சாலைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. இண்கோ நிர்வாகத்திற்கு, சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.
எனவே, சரியான விலையை, தாமதம் இல்லாமல், குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், இண்கோ தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகிக்கும் விவசாயிகள் நலன் கருதி, தேவையான நடவடிக்கை எடுப்பது எனவும், சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆன்ட்டி கவுடர் நன்றி கூறினார்.