/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் பெய்த மழையால் இதமான காலநிலை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
/
மலையில் பெய்த மழையால் இதமான காலநிலை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
மலையில் பெய்த மழையால் இதமான காலநிலை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
மலையில் பெய்த மழையால் இதமான காலநிலை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
ADDED : ஏப் 14, 2025 06:54 AM

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால், இதமான காலநிலை நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சில நாட்கள் மழை பெய்தது. இதனால், விவசாய நிலங்கள் ஈரம் கண்டுள்ளன. இந்த மழை தேயிலை தோட்டம் உட்பட, மலை காய்கறி தோட்டங்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பகல், 1:00 மணி முதல், 4:00 மணிவரை, ஊட்டி, கோத்தகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், இதமான காலநிலை நிலவியது. இந்த மழை, விவசாய நிலங்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது. தவிர, நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து உயர்ந்து வருகிறது.
எதிர்வரும் வறட்சி நாட்களில், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை. மேலும், பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பதுடன், காய்கறி பயிர்கள் செழித்து வளர்வதற்கான சூழல் ஏற்பட்டது. நீர் ஆதாரங்களில், தண்ணீர் வரத்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.