/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலைக்கு நோய் அபாயம்: கவலையில் சிறு விவசாயிகள்
/
தேயிலைக்கு நோய் அபாயம்: கவலையில் சிறு விவசாயிகள்
ADDED : நவ 11, 2025 10:10 PM
கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டதில், 60 சிறு, குறு விவசாயிகள் இத்தொழிலை நம்பி உள்ளனர். தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு,18 ரூபாய் விலை கிடைக்கிறது.
தோட்டங்களை பராமரிக்க செலவினம் அதிகமாக உள்ளதால், இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. கடந்த, 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், தோட்டங்களுக்கு விவசாயிகள் உரம் இட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பருவ மழை பொய்த்துள்ள நிலையில், தோட்டங்களில் ஈரத்தன்மை குறைந்து வருகிறது. இந்நிலையில், இரு நாட்களாக, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது.
இதே போல காலநிலை தொடரும் பட்சத்தில், துளிர்விட்ட இலைகளில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், மகசூல் குறைந்து இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

