/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் பனியின் தாக்கம் அதிகரிப்பு
/
குன்னுாரில் பனியின் தாக்கம் அதிகரிப்பு
ADDED : டிச 16, 2025 05:30 AM

குன்னுார்: குன்னுார் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்ததுடன் கடுங்குளிர் நிலவியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட் களாக பனியின் தாக்கம் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் குறைந்தபட்ச காலநிலை, 5 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
இதனால் புல்வெளிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெண்மையாக காட்சியளிக்கிறது. சூரிய உதயத்தின் போதும் பனி மாறி ஆவியாக செல்லும் காட்சி, நடை பயிற்சி மேற்கொள்பவர்களை வசீகரிக்கிறது.
குறிப்பாக, குன்னுார் வெலிங்டன் படகு இல்ல ஏரி, ஜிம்கானா மைதானம் போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் ஒரு வாரமாக அதிகரித்துள்ளனர்.

