/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோலாடி காட்சி முனை அழகான அருவியால் ரம்மியம்
/
சோலாடி காட்சி முனை அழகான அருவியால் ரம்மியம்
ADDED : டிச 10, 2025 08:10 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியான, சோலாடி எஸ்டேட் காட்சி முனை அருகே, பசுமை வனத்திற்கு மத்தியில் பாயும் அருவி ரம்மியத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக எல்லை பகுதியாக சேரம்பாடி அருகே சோலாடி சோதனை சாவடி உள்ளது.
இதன் அருகே தனியார் தேயிலை தோட்டம் ஒட்டி அழகிய காட்சி முனை உள்ளது.
இங்கிருந்து பார்த்தால், கேரளாவின் வயநாடு மற்றும் மலப்புரம் வனப்பகுதிகளை ரசிக்க முடியும்.
தமிழக எல்லைக்குள் உட்பட்ட பகுதியில், தனியார் தோட்ட வனத்திற்கு மத்தியில் மேட்டுப்பாங்கான பகுதியில் இருந்து, பாயும் அருவி அழகாக காட்சி தருகிறது.
இந்த பகுதிக்கு செல்ல மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் தோட்ட நிர்வாகம் இணைந்து, நடைபாதை அமைத்தால் சுற்றுலா பயணிகள் அருவியை பார்த்து ரசித்து செல்ல முடியும்.

