ADDED : நவ 21, 2024 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; முதுமலை ஊராட்சி, முதுகுளி கிராமத்தில் பூர்வ குடிகளான பழங்குடியினர், மவுன்டாடன் செட்டி மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் வீடுகளுக்கு மின் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில், சோலார் மின்விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் முகமதுகனி, முதுகுளி மறுவாழ்வு சங்க தலைவர் சுரேஷ், நிர்வாகி தேவதாஸ் உட்பட பலர் பழங்குடியினருக்கு சோலார் மின் விளக்குகளை வழங்கினர்.
பல ஆண்டுகளாக வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்தி வந்த நிலையில், சோலார் மின்விளக்கு கிடைத்ததால் பழங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.