sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சோலார் மின்சார மானியம் இன்று சிறப்பு முகாம்

/

சோலார் மின்சார மானியம் இன்று சிறப்பு முகாம்

சோலார் மின்சார மானியம் இன்று சிறப்பு முகாம்

சோலார் மின்சார மானியம் இன்று சிறப்பு முகாம்


ADDED : மார் 09, 2024 07:25 AM

Google News

ADDED : மார் 09, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : மத்திய அரசின், சோலார் இலவச மின்சார திட்டத்தில், சிறப்பு முகாம் இன்று (9ம் தேதி) அன்னுார் தபால் அலுவலகத்தில் நடக்கிறது.

மத்திய அரசு, நாடு முழுவதும், ஒரு கோடி வீடுகளில் சோலார் மின்சார பேனல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. சோலார் மின்சார பேனல் அமைக்கப்படும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் அன்னுார், அவிநாசி ரோட்டில் உள்ள, தபால் அலுவலகத்தில், இன்று (9ம் தேதி) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

இது குறித்து தபால் அலுவலர்கள் கூறுகையில்,' இந்தத் திட்டத்தில் ஒரு கிலோ வாட்மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுக்கு,60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மானியம் 30,000 ரூபாய் வழங்கப்படும். இரண்டு கிலோ வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். 60 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது.

வாடகை வீட்டில் குடியிருப்போரும் தங்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால் விண்ணப்பிக்கலாம். வீடு மாற்றிச் செல்லும்போது சுலபமாக பிரித்து வேறொரு இடத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு கிலோ வாட் சோலார் பேனல் ஒரு நாளில் குறைந்தது 4 யூனிட் முதல் அதிகபட்சம் ஐந்தரை யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும்.

முகாமில் பங்கேற்போர் ஆறு மாதத்திற்கு உட்பட்ட மின் கட்டண ரசீது ஒன்று, மின் இணைப்பு எண், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து பயன் பெறலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us