/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்.இ.டி., உடை அணிந்த ராணுவ வீரர்கள் மின்னொளியில் ஓய்யார அணிவகுப்பு
/
எல்.இ.டி., உடை அணிந்த ராணுவ வீரர்கள் மின்னொளியில் ஓய்யார அணிவகுப்பு
எல்.இ.டி., உடை அணிந்த ராணுவ வீரர்கள் மின்னொளியில் ஓய்யார அணிவகுப்பு
எல்.இ.டி., உடை அணிந்த ராணுவ வீரர்கள் மின்னொளியில் ஓய்யார அணிவகுப்பு
ADDED : டிச 08, 2025 05:44 AM

குன்னூர்: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ வீரர்கள், எல்.இ.டி., பல்புகள் பொருத்திய உடை அணிந்து, மின்னொளி அலங்காரத்தில், பேண்ட் இசைத்து ஒய்யார அணி வகுப்பில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், தற்போது அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நாட்டின் எல்லை பகுதிகளுக்கு பணியாற்ற அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இங்கு ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் ராணுவ இசை சிறப்பு பெற்றுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய 'பேக் பைப்ஸ்' எனப்படும் இசைக்கருவி தற்போதும் இசைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, ராணுவ இசை குழுவினர் மின்னொளி அலங்கார உடை அணிந்து முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த குழுவினரின் ராணுவ இசை நிகழ்ச்சி, வெலிங்டன் பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில், அக்னி வீரர்களின் சத்திய பிரமாணத்திற்கு பிறகு இரவு நேரத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ராணுவ வீரர்கள் அணிந்த உடையில், எல்.இ.டி பல்புகள் பொருத்தி மின்னொளி அலங்காரத்தில், இசைத்து, ஒய்யார அணி வகுப்பில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவினர் ராணுவ இசை மட்டுமின்றி, திரைப்பட பாடல்களையும் இசையால் இசைத்து அனைவரையும் கவர்ந்தனர்.

