/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓணிக்கண்டி பஸ் நிறுத்தத்தை கவனியுங்க ஆபீசர்
/
ஓணிக்கண்டி பஸ் நிறுத்தத்தை கவனியுங்க ஆபீசர்
ADDED : டிச 08, 2025 06:03 AM

மஞ்சூர்: ஓணிக்கண்டி பஸ் நிறுத்தத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மஞ்சூரிலிருந்து கோவைக்கு செல்லும் சாலையில் ஓணிக்கண்டி சுற்றுவட்டாரத்தில், 500 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு செல்ல ஓணிக்கண்டி வழியாக தான் செல்ல வேண்டும். பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவிலுக்கு இவ்வழியாக தான் செல்ல வேண்டும். ஓணிக்கண்டி பஸ் நிறுத்தத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் மழை நீர் வழிந்தோட வழியில்லாததால் மழை சமயத்தில் தண்ணீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கக்கூடிய பள்ளி செல்லும் மாணவ, -மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்துக்கு பல முறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதிருப்தியில் உள்ளோம். பேரூராட்சி நிர்வாகம் தாமதிக்காமல் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.' என்றார்

