/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன விலங்கு அச்சத்தால் பணி நேரத்தை குறைக்கணும்; டாஸ்மாக் சங்க கூட்டு குழு வலியுறுத்தல்
/
வன விலங்கு அச்சத்தால் பணி நேரத்தை குறைக்கணும்; டாஸ்மாக் சங்க கூட்டு குழு வலியுறுத்தல்
வன விலங்கு அச்சத்தால் பணி நேரத்தை குறைக்கணும்; டாஸ்மாக் சங்க கூட்டு குழு வலியுறுத்தல்
வன விலங்கு அச்சத்தால் பணி நேரத்தை குறைக்கணும்; டாஸ்மாக் சங்க கூட்டு குழு வலியுறுத்தல்
ADDED : டிச 08, 2025 06:04 AM
ஊட்டி: மலை மாவட்டங்களில் வன விலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், இரவு பணி நேரத்தை குறைக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நீலகிரி மாவட்ட டாஸ்மாக் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆல்துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விற்பனையாளர் சங்க மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன், சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர்கள் பொது செயலாளர் மகேஷ், டாஸ்மாக் எல்.பி.எப்., மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நேரத்தை குறைக்கணும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது,
'காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணி சுமை பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாற்று திட்டம் உருவாக்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில், 23 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய பணி நிரந்தர தீர்ப்பு உத்தரவுகளை அரசு மேல்முறையீடு செய்யாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மலை மாவட்டங்களில் வன விலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் இரவு பணி நேரத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில், சி.ஐ.டி.யு., நிர்வாகி நவீன் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

