ADDED : டிச 08, 2025 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தாநாயகி வெளியிட்டுள்ள அறிக்கை;
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த அதிகரட்டி துணை மின் நிலையத்தில் வரும் இன்று 8ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதன்படி, அதிகரட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
எனவே மின் நுகர்வோர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

