/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம்; தீவிரம் காட்ட அறிவுறுத்தல்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம்; தீவிரம் காட்ட அறிவுறுத்தல்
திடக்கழிவு மேலாண்மை திட்டம்; தீவிரம் காட்ட அறிவுறுத்தல்
திடக்கழிவு மேலாண்மை திட்டம்; தீவிரம் காட்ட அறிவுறுத்தல்
ADDED : மார் 13, 2024 10:15 PM
சூலுார் : சூலுார் வட்டாரத்தில், 10 ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில், கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சிகள் மற்றும் அவிநாசி மற்றும் திருச்சி ரோட்டில் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தீவிரப்படுத்த, ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவிநாசி ரோட்டை ஒட்டி, நீலம்பூர், சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன் புதூர், அரசூர், கணியூர் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. திருச்சி ரோட்டை ஒட்டி, பட்டணம், பீடம் பள்ளி, கலங்கல், காங்கயம்பாளையம், காடாம்பாடி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.
தற்போதைய நிலையில், இந்த ஊராட்சிகளில், மக்கள் தொகை, 20 ஆயிரம் முதல், 30 ஆயிரமாக உள்ளது. இதனால், நாள்தோறும் டன் கணக்கில் குப்பை சேருகிறது. இந்த ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதை மேலும் தீவிரப்படுத்த ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக மேற்கண்ட, 10 ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், ஒரு ஊராட்சிக்கு தலா நான்கு தூய்மை காவலர்கள் கொண்ட குழுவினருக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு சென்ற அக்குழுவினர், எவ்வாறு, மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது என, பார்வையிட்டனர்.
இதுகுறித்து பி.டி.ஓ., (ஊராட்சிகள்) முத்துராஜூ கூறுகையில்,முதல்கட்டமாக, 10 பெரிய ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர்கள், தூய்மை காவலர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளோம், என்றார்.

