/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சோயா பீன்ஸ்' மெழுகுவர்த்தி பல வண்ணங்களில் தயாரிப்பு
/
'சோயா பீன்ஸ்' மெழுகுவர்த்தி பல வண்ணங்களில் தயாரிப்பு
'சோயா பீன்ஸ்' மெழுகுவர்த்தி பல வண்ணங்களில் தயாரிப்பு
'சோயா பீன்ஸ்' மெழுகுவர்த்தி பல வண்ணங்களில் தயாரிப்பு
ADDED : பிப் 16, 2024 11:42 PM

குன்னுார்;குன்னுாரை சேர்ந்த பட்டதாரி பெண் 'சோயா பீன்ஸ்' ஆயிலில் அழகிய வண்ண வடிவமைப்புகளில் மெழுகுவர்த்தி தயாரித்து அசத்தி வருகிறார்.
குன்னுார் சமயபுர ஆழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்த பட்டதாரி ரேஷ்மா. இவர் சோயா பீன்ஸ் ஆயிலில் மெழுகுவர்த்தி தயாரித்து வருகிறார்.
இதில், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பல வண்ணங்களில் இயற்கையான வாசனை திரவியங்கள் பயன்படுத்தி பொம்மைகள், மலர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட வடிவமைப்புகளில் மெழுகுவர்த்தி தயாரித்து வருகிறார்.
ரேஷ்மா கூறுகையில், ''பொதுவாக பாராபின் மெழுகினால் மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. சோயா பீன்ஸ் மெழுகினால் தயாரிக்கும் மெழுகுவர்த்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது நறுமணம் வீச வாசனை பொருட்கள் இதில் பயன்படுத்தி தயாரித்து வருகிறேன்.
இதனை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்,'' என்றார்.