/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
/
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
ADDED : ஜன 03, 2024 11:45 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது.
வி.ஏ.ஓ. யுவராஜ் வரவேற்றார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், பழங்குடியின மக்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, பழங்குடியினருக்கான ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல், ஜாதி சான்று, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு, வங்கி கணக்கு துவங்குதல், மருத்துவ ஆலோசனை மற்றும் தோட்டக்கலை துறையின் திட்டங்கள் பெறுவதற்காக பதிவு செய்தல் உள்ளிட்ட பதிவுகள் செய்யப்பட்டது.
அதில், சுற்று வட்டார பகுதி பழங்குடியின மக்கள் பங்கேற்று பயன் பெற்றதுடன், அவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை அலுவலர் வினோத்குமார், கனரா வங்கி மேலாளர் விஷ்ணு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பழங்குடியின பயனாளிகள் பங்கேற்றனர்.