/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
/
அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED : நவ 05, 2025 08:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில், பிரசித்தி பெற்ற பெரிய அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை, முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர்.
அத்துடன் அம்மனுக்கு குங்கும அபிஷேகமும் செய்யப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் ராதாகிருஷ் ணன் தலைமையிலான குழுவினர் செய்தனர். பூஜையில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

