/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
ADDED : ஜன 20, 2025 06:39 AM
கோத்தகிரி : கோத்தகிரி ஓரசோலை அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். அதில், கபடி, கயிறு இழுத்தல், கிரிக்கெட், எறிபந்து, கோகோ, இசை நாற்காலி மற்றும் கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், பொங்கல் விழாவின் பாரம்பரியம், விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில், சிறப்பு பயிற்றுனர் ரவி, வருவாய் துறை ஊழியர் மகேஷ், மருத்துவர் திவ்யா மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர் நளினி உட்பட, பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.