/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு
ADDED : அக் 08, 2025 10:05 PM
கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், திரளான மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை பதிவு செய்தனர்.
மாநில அரசு, பொது மக்களின் கோரிக்கையை, அரசு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று, நிவர்த்தி செய்ய ஏதுவாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் திட்டத்தை ஏற்படுத்தி, தீர்வு கண்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, பில்லிக்கம்பை கிராமத்தில் முகாம் நடந்தது. அதில், ஊராட்சிக்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட, பொதுமக்கள் தங்களது தேவைகள் குறித்து முகாமில் விண்ணப்பம் பெற்று பதிவு செய்தனர். பதிவு செய்த அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. அதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.