/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகளுக்கு மாநில விருது அறிவிப்பு
/
பெண் குழந்தைகளுக்கு மாநில விருது அறிவிப்பு
ADDED : ஜன 01, 2024 10:53 PM
ஊட்டி:பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநில அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம், அனைத்து பெண் குழந்தைகளும், 18 வயது வரை கல்வியை உறுதி செய்யவும், பெண் குழந்தை திருமணத்தை தடுக்க, பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும், 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், மாநில அரசு விருது அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும், சிறந்த சேவை புரிந்து வரும் பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன., 24) பாராட்டு பத்திரமும் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.
தகுதிகள்
இதற்கு, 13 வயதிற்கு மேல், 18 வயதுக்குள் தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை; பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு; பெண் குழந்தை திருமணம் ஒழிப்பு; பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகளில் இருந்து தீர்வு கண்டிருப்பது.
மேலும், ஓவியம், கவிதை மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பது, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்க வேண்டும்.
இது போன்று, தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விருதுக்கான விண்ணப்ப விவரங்களை, தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணைய தளத்தில் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா இரண்டு நகல்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

