/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை நிறுத்த போராட்டத்தால் மாநில எல்லை பகுதிகள் 'வெறிச்'
/
வேலை நிறுத்த போராட்டத்தால் மாநில எல்லை பகுதிகள் 'வெறிச்'
வேலை நிறுத்த போராட்டத்தால் மாநில எல்லை பகுதிகள் 'வெறிச்'
வேலை நிறுத்த போராட்டத்தால் மாநில எல்லை பகுதிகள் 'வெறிச்'
ADDED : பிப் 13, 2026 05:39 AM

கூடலுார்: 'மத்திய அரசு, கொண்டு வந்துள்ள தொழிலாளர்கள் சட்டங்களை, தொழிலாளர்களுக்கு விரோதமானது,' என, கண்டனம் தெரிவித்து, 'இண்டி' கூட்டணி சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில், பல்வேறு அமைப்புகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பல பகுதிகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டம், கர்நாடகா, கேரளா இடையே அரசு பஸ் மற்றும் தனியார் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், நாள்தோறும் கேரளாவில் இருந்து நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும், தமிழக - கேரளா எல்லையில், கூடலுார் பகுதியில் அமைந்துள்ள நுழைவு வாயில்கள், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கேரளா செல்ல வேண்டிய கர்நாடக கனரக வாகனங்கள் சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன. சுற்றுலா வாகனங்கள் மட்டும் நீலகிரிக்கு வந்து சென்றன.