/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறைச்சி கழிவால் துர்நாற்றம்; கண்டுக்கொள்ள யாருமில்லை
/
இறைச்சி கழிவால் துர்நாற்றம்; கண்டுக்கொள்ள யாருமில்லை
இறைச்சி கழிவால் துர்நாற்றம்; கண்டுக்கொள்ள யாருமில்லை
இறைச்சி கழிவால் துர்நாற்றம்; கண்டுக்கொள்ள யாருமில்லை
ADDED : நவ 05, 2024 08:56 PM
ஊட்டி ; ஊட்டி நகராட்சி தற்காலிக சந்தையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
அங்கு வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி சார்பில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டது.
குறிப்பாக, இறைச்சி கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை கொட்ட சரிவர இட வசதி இல்லை.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள கடை நுழைவு வாயில் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளிலிருந்து ரத்த வெளியேறி புழுக்கள் அதிகரித்து நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் நகராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். எனினும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் பெயரளவுக்கு ஆய்வு மேற்கொண்டு சென்றதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால், நகராட்சி அதிகாரிகள் உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்.