ADDED : நவ 15, 2024 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பஸ் ஸ்டாண்ட், கமர்ஷியல் சாலை, லேயர் பஜார், தாவரவியல் பூங்கா சாலைகளில் மக்கள் நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
சில நேரங்களில் சுற்றுலா பயணிகளை தெரு நாய்கள் விரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து உள்ளூர் மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்தும் பயனில்லை. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.