தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 01, 2024 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:குன்னுார் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோமதி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

'குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். காந்திபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சென்ற பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தொடக்க கல்வி அலுவலர் முன்னிலையில், ஒன்றாம் வகுப்பில், 5 மாணவர்கள் புதிதாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.

தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, ஆசிரியைகள் சியாமளாதேவி சுமதி கவிதா விஜயலட்சுமி, ருக்மணி ஜோதிமணி பேசினர்.

கவுன்சிலர் உமா, பள்ளி மேலாண்மை குழு தலைவி புஷ்பா மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us