தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாணவி தற்கொலை தி.மு.க., நிர்வாகி சரண்

மாணவி தற்கொலை தி.மு.க., நிர்வாகி சரண்

மாணவி தற்கொலை தி.மு.க., நிர்வாகி சரண்


ADDED : ஜன 07, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2024 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் மூர்த்தி - மல்லிகா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, 21; கோவை தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.

புத்தாண்டு விடுமுறைக்கு கோத்தகிரி வந்த ஸ்ரீநிதி, 2ம் தேதி பெற்றோர் பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், தன் நண்பர்களுடன் வந்து, வீட்டு கதவை தட்டி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

மேலும், பல நாட்களாக அவருக்கு போன் செய்தும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் விரக்தியில் கடிதம் எழுதி வைத்து, ஸ்ரீநிதி துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் உடலை மீட்டனர்.

மாணவியின் தந்தை உட்பட, 30க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை, கோத்தகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மாணவி தற்கொலைக்கு காரணமான, தி.மு.க., நிர்வாகி வினோத்தை கைது செய்ய கோரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவரை தேடி வந்த நிலையில், வினோத் நேற்று மாலை, குன்னுார் சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, 15 காவலில் சிறையில் அடைக்க, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்துல்சலாம் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us