/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாம்; பயனடைந்த மாணவர்கள்
/
இலவச மருத்துவ முகாம்; பயனடைந்த மாணவர்கள்
ADDED : ஜூலை 25, 2025 08:32 PM
கோத்தகிரி; கோத்தகிரி கக்குச்சி மகாத்மா காந்தி மெட்ரிக் பள்ளி, சிவானி மெடிக்கல் சென்டர் மற்றும் கோவை துரியலலுார் காஸ்மெட்டிக் சர்ஜரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை சார்பில், இ.என்.டி., மற்றும் பல் மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
மருத்துவர் பிரவீணா நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தினர். அதில், 'காது கேளாமை, காது மாடல் தைத்தல், பச்சிளம் குழந்தைகளுக்கு செவித்திறன் கண்டறிதல், மூக்கு ஒவ்வாமை, சைனஸ், தலைவலி தலைசுற்றல் பிரச்சனை, கழுத்து கட்டி, குறட்டை, தைராய்டு மற்றும் குரல் கோளாறு,' பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என, 500 பேர் பங்கேற்று பயனடைந்தனர். மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி அறங்காவலர் வெற்றிவேல் மற்றும் பள்ளி முதல்வர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.