/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே சாதிக்க முடியும்' விஞ்ஞானி அசோக்குமார் அறிவுரை

ADDED : ஜன 28, 2025 10:09 PM

கூடலுார், ; கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 41வது அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் வீவா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை நிஷா பாப்பச்சன் தலைமை வகித்தார்.
கூடலுார் எம்.எல்.ஏ., ஜெயசீலன் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
சென்னை தனியார் பல்கலைக்கழக மரபுசாரா எரிசக்தி திடக்கழிவு மேலாண்மை விஞ்ஞானி அசோக்குமார் பேசுகையில், ''மாணவர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தினால், எதிர்காலத்தில் சாதிக்க முடியும். பயனற்றதாக கருதப்படும், குப்பை, திட கழிவுகளை மறு சூழற்சி மூலம் பயன்படுத்த முடியும். மாணவர்கள் ஒருவரை எதிர் பார்த்தோ, சார்ந்தோ இருப்பதை தவிர்த்து, தலைமை பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்,'' என்றார். 'தன்னம்பிக்கை' குறித்து, கவிஞர் மணிவண்ணன் பேசினார்.
தொடர்ந்து, சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அறிவியல் கண்காட்சி நடந்தது. பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் சுதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பீனா நன்றி கூறினார்.