தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தட்டச்சு தேர்வில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு

தட்டச்சு தேர்வில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு

தட்டச்சு தேர்வில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : ஆக 26, 2026 05:02 PM

ADDED : ஆக 26, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 05:02 PM ADDED : ஆக 26, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்:குன்னூர் வெலிங்டன் பேரக்ஸில், அரசு தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

விழாவில், பயிலக முதல்வர் பாலச்சந்தர் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கன்டோன்மென்ட் துணை தலைவர் வினோத் குமார், நீலகிரி மக்கள் நற்பணி மைய சட்ட ஆலோசகர் வக்கீல் தினேஷ்குமார், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அரசு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

மாணவி ஷாலினியின் சிலம்பாட்டம், சுப்ரியா தேவி உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆங்கிலம் இளநிலை முதல் வகுப்பில், துர்கா தேவி, தீபிகா, சாய் கரண் சாகில், சரிதில், சங்கர் கணேஷ், மரியா கெவின்; ஆங்கிலம் முதுநிலை முதல் வகுப்பில் நிதிக், நிதீஷ், மேகா, ஷாலினி, சுப்ரியா தேவி, தமிழ் முதல் வகுப்பில் காயத்திரி, சங்கர் கணேஷ், இரண்டாம் வகுப்பில் பிரபாகரன் ஆகியோர் கவரவிக்கப்பட்டனர்.

முதலிடம், இரண்டாம் இடம் பிடித்த தமிழ் செல்வன், முருகராஜ், மோகன் குமார், சஞ்சய் குமார், பாபு, ரிதன்யா, ராஜேஷ்கண்ணன், லஷ்மி, சங்கிலி கருப்பன், பார்த்திபன், புகழேந்தி உட்பட தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us