UPDATED : ஆக 26, 2026 05:06 PM
ADDED : ஆக 26, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு, மத நல்லிணக்க பேரணி நடந்தது.
முகமதிய மிலாது கமிட்டி தலைவர் சையத் முகமது ஷா, ஹாயத்துல் இஸ்லாம் மதரஸா செயலாளர் உபைதுல்லா, கமிட்டி துணைத் தலைவர் ரபீக் மற்றும் இமாம் சுல்தான் ஆலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊட்டி பெரிய பள்ளிவாசலில் துவங்கிய பேரணியை, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்க வைத்தார். நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, ஏ.டி.சி., திடலை அடைந்தது.
தொடர்ந்து, மத நல்லிணக்கம் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது. இதில், நீலகிரி எஸ்.பி., பிருந்தா, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
