ADDED : ஆக 26, 2026 05:10 PM

அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூர் ஊட்டி சாலையில் அருவங்காடு அருகே, சாலையின் நடுவே காட்டெருமை நடந்து சென்ற போதும் மக்கள் அச்சமின்றி சென்றனர்.
குன்னூர் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் அவ்வப்போது குடியிருப்புகள், சாலைகள், தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. அருவங்காடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.
நேற்று காலை குன்னூர் ஊட்டி சாலையின் நடுவே வயது முதிர்ந்த காட்டெருமை ஹாயாக நடந்து சென்றது. நடந்து சென்ற மக்களும் வாகனங்களில் வந்தவர்களும் எந்த அச்சமுமின்றி நடந்து சென்றனர்.
திடீரென பைக் நிறுத்தி வைத்த இடத்தில் இருந்தவர்களை விரட்ட முயற்சி செய்தது.
வனத்துறையினர் இந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
