/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆபத்தான பயணத்தில் மாணவர்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
ஆபத்தான பயணத்தில் மாணவர்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ஆபத்தான பயணத்தில் மாணவர்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ஆபத்தான பயணத்தில் மாணவர்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 14, 2024 01:14 PM

பந்தலுார்: அரசு பஸ்களில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
பந்தலுார் அருகே குந்தலாடியில் இருந்து காலை, 7:30 மணிக்கு பாக்கனா, ராக்வுட், நெலாக்கோட்டை வழியாக, கூடலுாருக்கு மினி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பயணிகள் மற்றும் நெலக்கோட்டை மற்றும் தேவர்சோலை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் அதிக அளவில் பயணிக்கின்றனர்.
இதனால், ராக்வுட், நெலாக்கோட்டை பகுதிகளில் பயணிகள் மற்றும் மாணவர்களை ஏற்ற முடியாத நிலையில் பஸ் இயக்கப்படுகிறது. மேலும், பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணிப்பதால், ஆபத்துகள் ஏற்படும் சூழல் தொடர்கிறது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், மழையில் நனைந்தபடி படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள், நிலை தடுமாறி கீழே விழுந்தால் பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, இந்த வழித்தடத்தில் மினி பஸ்சை மாற்றி, சாதாரண பஸ்சை இயக்க வேண்டியது அவசியம்.